ஆர்மி ஆரம்பிச்சவங்களே இப்போ இவங்கள வேனாம்னு சொல்றாங்க! பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் அவுட் ஆவது இவர் தான்!

0
496

பிக்பாஸ் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. எண்பதாவது நாளை நோக்கி நகரும் பிக்பாஸில் இன்னும் ஓர் ஊரே உள்ளே உட்கார்ந்திருக்கிறது. சென்றாயன், ஜனனி, ரித்விகா, மும்தாஜ், யாஷிகா, ஐஷ்வர்யா, பாலாஜி இவர்களுடன் புதிதாக விஜயலட்சுமி வேறு இணைந்திருக்கிறார்.

இன்னும் 3 வாரங்களில் எப்படி இத்தனை பேரை வெளியே அனுப்புவார்கள் எனக் கேள்வி ஒருபுறம் இருக்க, மேலும் 5 நாள்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நீடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் இருப்பவர்கள் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், விஜயலட்சுமி , ஐஷ்வர்யா. பல வாரங்கள் கழித்து ஐஷ்வர்யா நாமினேசன் பட்டியலுக்கு வந்திருக்கிறார். இதற்கு முன், ஒவ்வொரு முறையும் ஐஷ்வர்யா காப்பாற்றப்பட்டுக்கொண்டே வந்தார்.

நாமினேசன் பட்டியலில் இருக்கும் ஜனனி காப்பாற்றப்பட வேண்டுமெனில் பாலாஜி மொட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என டாஸ்க் அளித்தார் பிக்பாஸ். அதை, பாலாஜி செய்துவிட்டதால், நாமினேசனிலிருந்து ஜனனி விலகிவிட்டார்.

மீதமிருக்கும் நால்வரில், மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐஷ்வர்யாவை காப்பாற்ற சென்றாயன் தலைமுடியில் கலர் அடித்துக் கொள்ள வேண்டுமென கூறப்படிருந்த நிலையில், நீண்ட வாக்குவாதங்களுக்கு பிறகு சென்றாயன் தலைமுடியில் கலர் பூசிக் கொண்டுள்ளார். இதனால் ஐஷ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஆனால், இது அடுத்த வாரத்திற்குரியது என்பதால், இந்த வாரம் கட்டாயம் ஐஷ்வர்யா தான் வெளியேறுவார் என வலைதங்களில் அதிகளவில் பேசப்படுகிறது. மேலும், அவர் தான் வெளியேறவேண்டும் என்றும் கருத்துகள் அதிகளவில் பதிவிடப்பட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, கடந்த சில வாரங்களாக வலைதள வட்டாரங்கள் சொல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த வாரமும் ஐஷ்வர்யா வெளியேறுவது உறுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஅடுத்ததாக ஸ்ரீ ரெட்டியின் சர்ச்சை வலையில் சிக்கிய பிரபல நடிகர்!
Next articleசுப நிகழ்வுகளை ஞாயிற்று கிழமைகளில் வைக்க கூடாது! என்ன‌ காரணம் தெரியுமா?