திருகோணமலை – அபேபுர பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலையில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபேபுர பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உப்பு வெளி பொலிஸாரினால் நேற்று இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
இவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள 16 வயது யுவதி ஒருவரிடம், கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பிக்க முயற்சி செய்ததுடன் அவரை துஷ்பிரயோகம் செய்யவும் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் உப்புவெளி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.