ஆபத்தை எண்ணி அதிர்ச்சியில் மக்கள்! இலங்கையில் திடீரென செத்துக் குவிந்த மீன்கள்!

0

இலங்கையின் ஒரு பகுதியிலுள்ள ஏரியில் திடீரென பெருந்தொகை மீன்கள் உயிரிழந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பூந்தல தேசிய பூங்காவிற்கு சொந்தமான ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளன.

மீன்கள் உயிரிழந்த நிலையில் மிதப்பதை பூங்காவுக்கான பொறுப்பாளர் ஆர்.ஜீ.ஆர்.எஸ்.ரணதுங்க முதலில் அவதானித்துள்ளார்.

ஏரியில் ஆபத்தான பொருட்கள் எதுவும் கலக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் மீன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் நாரா நிறுவனத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திடீரென ஆயிரக்கணக்காக மீன்கள் உயிரிழந்தமையினால், அதுதொடர்பில் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleகொழும்பில்! இளைஞர்களுடன் நடந்து கொண்ட விதம்! அதிகளவு போதையில் மிதந்த பெண் வைத்தியர்!
Next articleசிறுமிக்கு கொடுத்த அன்பு பரிசு! குழந்தையாக மாறிய ஜனாதிபதி!