ஆசியாவில் மிகவும் மோசமான நாணயமாக மாறிய இலங்கை ரூபா!

0
598

ஆசியாவில் பெறுமதியற்ற நாணயமற்ற பட்டியலில் இலங்கை ரூபாயும் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடாக ரொய்ட்டர் செய்தி சேவை அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ரூபாயில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 153.46 ரூபாவாக காணப்பட்டது. எனினும் அது வருட இறுதியில் 184.63 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய கடந்த வருடத்தில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 19 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலைமை அடுத்த வருடத்தில் நாட்டின் பொருளாதாரத்தை எந்தளவு பாதிக்கும் என்பது தொடர்பில் பொருளாதார வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கொழும்புப பல்கலைக்கழக பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியங்க துனுசிஙக தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் இருந்து தப்பிப்பதற்கு ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுகளை அவசியம் ஊக்குவிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous articleதிடீரென காருடன் கருகி உயிரிழந்த நபர்… வெளியேற முடியாதது ஏன் என தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்!
Next articleபிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதற்கான வழி!