இலங்கையின் வடமேற்கே உடப்பில் இருந்து தொடுவாவ வரையிலான கரையோரப் பகுதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சமுத்திரம் சுற்றாடல் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது.
அங்கு குவிந்திருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வரையில் கரையோரப் பகுதியை பயன்படுத்த வேண்டாம் என சமுத்திரம் சுற்றாடல் பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டெர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அகற்றப்பட்ட ஒருவகையான இரசாயன பொருட்கள் புத்தளம் கரையோரப்பகுதியில் குவிந்திருந்தமை தொடர்பாக பரிசோதனை நடத்துவதற்காக தமது அதிகாரிகள் குழுவொன்று, புத்தளம் பிரதேசத்துக்கு அனுப்பிவைத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




