நுகேகொட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் செயற்பட்ட விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மூன்று அழகிகள் மற்றும் விடுதியின் முகாமையாளர் ஆகியோரையே கைது செய்துள்ளதாக மீரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் அனுராதபுரம், பிபிலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 18 முதல் 35 வயதிற்கு உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடை தொழிற்சாலைகளில் வேலை செய்யப் போவதாக வீட்டுக்காரர்களிடம் கூறி விட்டு, விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நுகேகொட அம்புள்தெனிய வீதியில் இரண்டு மாடி கட்டடத்தில் இந்த மசாஜ் நிலையம் நடாத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.