அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்! நகர முடியாமல் கிடந்த நல்ல பாம்பு!
மதுரையில் காயத்துடன் போராடிய நல்ல பாம்புக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காட்டுப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
மதுரையின் முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் நகர முடியாமல் காயத்துடன் நல்ல பாம்பு கிடந்துள்ளது, இதனை பார்த்த பொதுமக்கள் பத்திரமாக பாம்பை மீட்டு பன்நோக்கு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாம்பை பரிசோதித்த மருத்துவர், உடனடியாக முதலுதவி செய்ததுடன் மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சையும் செய்தனர்.
காயம் இருந்த இடத்தில் தையல் போடப்பட்டு, பின்னர் பாம்புவின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாம்பை மதுரை சரக வனத்துறை அதிகாரிகள் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: