அரைகுறை ஆடையுடன் கடற்கரையில் அமலாபால்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான அமலாபாலின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
சிந்துசமவெளி என்ற படத்தில் அமலாபால் அறிமுகமானாலும், மைனா படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.
இந்நிலையில் இயக்குனர் விஜயை காதலித்து மணமுடித்தாலும், கருத்துவேறுபாடால் விவாகரத்து பெற்றனர்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அமலாபால், ஆடை படத்தில் முழு நிர்வாணமாக நடித்து பரபரப்பை கிளப்பினார்.
தற்போது படங்கள் எதுவும் கைவசம் இல்லாததால் ஜாலியாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றாராம்.
சமீபத்தில் இந்தோனேஷியா சென்றவர் அங்குள்ள கடற்கரையில் ஊஞ்சல் ஆடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.