அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய மர்மக்குழு! மாத்தளையில் பரபரப்பு!

0

மாத்தளையில் அரச அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.யட்டத்தையில் கிரபைட் அகழ்வு குறித்து ஆராயச் சென்ற அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுமார் 40 பேர் கொண்ட குழுவினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலினால் அதிகாரிகள் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலால் காயமடைந்த அதிகாரிகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்திபொல மலைப்பகுதியில் நடத்தப்படும் இந்த அகழ்வு காரணமாக பாரிய சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் குறித்த பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளனர். இதன்போது 40 பேர் அடங்கிய குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅரச வங்கிகளில் கடன் பெற காத்திருக்கிறீர்களா! உங்களுக்கு ஓர் நற்செய்தி!
Next articleஇரண்டரைக் கோடி மதிப்புள்ள நகைகளைக் கடத்திய சிங்கப்பூர் தம்பதிக்கு கட்டுநாயக்காவில் நேர்ந்த சோகம்!