அரசாங்கம் விடுத்துள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான‌ எச்சரிக்கை!

0
512

அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் அமைதியாகவும், நட்பு ரீதியாகவும் தங்களது கடமைகளை செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு தங்களது கடமைகளை செய்யும் போது நாட்டின் அபிவிருத்திக்காக தங்களது பங்களிப்பினை அரச ஊழியர்கள் வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.

ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் ஒழுக்க விதிகளுக்கு முரணாகவோ அல்லது நாச வேலைகளிலோ அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டால் தராதரம் பாராது எந்தவொரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிரகாவும் கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Previous articleமீன் எண்ணெய் மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம்!
Next articleநீர் மற்றும் மின்சார வசதிகள் துண்டிப்பு! அலரி மாளிகையில்!