Home thatstamil one india tamil oneindia tamil அம்மா கூப்பிடறாங்க: தமிழகத்தை உலுக்கிய சிறுமி துஷ்பிரயோக வழக்கில் வெளியான பகீர் தகவல்!

அம்மா கூப்பிடறாங்க: தமிழகத்தை உலுக்கிய சிறுமி துஷ்பிரயோக வழக்கில் வெளியான பகீர் தகவல்!

0
541

தமிழகத்தை உலுக்கிய சென்னை அயனாவரம் சிறுமிக்கு இந்த கொடுமை எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்ற பின்னணித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் தனது குடியிருப்பு வளாக பணியாளர்கள் 11 பேரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அயனாவரம் சிறுமி குறித்த பகீர் செய்தியால் தமிழகமே கொந்தளித்தது.

சிறுமியை சீரழித்த 11 பேரும் காவல்துறை விசாரணையை அடுத்து தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்கள் குழு மூலமாக உடல் மற்றும் மனநலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். சிறுமிக்கான மருத்துவப் பரிசோதனை தற்போது முடிவுற்ற நிலையில் அது குறித்த தகவல்கள் நாளை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்படுமெனக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி மனநலம் குன்றியவர் என்றொரு செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வரும்நிலையில் மருத்துவர் குழுவின் பரிசோதனை முடிவுகள் அதைப் பொய்யாக்கியுள்ளது.

அயனாவரம் சிறுமி விடயத்தில் அச்சிறுமிக்கு தனக்கு நடந்த பாதிப்பு குறித்து விவரம் அறியாத நிலையே தற்போது வரை நீடிக்கிறதே தவிர, தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறோம் என்பதையெல்லாம் அச்சிறுமி இதுவரை உணரவில்லை என்றே மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

சிறுமிக்கு செவித்திறன் குறைபாடு இருந்த காரணத்தால் தனது மகளை பிற இயல்பான குழந்தைகளுடன் விளையாட அனுமதிப்பதில் சிறுமியின் தாயாருக்கு மனத்தாங்கல் இருந்திருக்கிறது.

இதன் காரணமாக அவர் சிறுமியை தன்னோடும் பிறகு தனியாகவும் விளையாடப் பழக்கி இருக்கிறார். அப்படி விளையாடிப் பழகிய சிறுமியின் பொழுதுபோக்குகளில் ஒன்று குடியிருப்பு லிஃப்டில் மேலும் கீழுமாக பயணிப்பது.

இதை தன் தாயாரின் துணையுடன் சிறுமி பலமுறை பொழுதுபோக்காகச் செய்து வந்திருக்கிறார்.

சில சந்தர்பங்களில் இதைத் தொடர்ந்து கண்ட குடியிருப்பு லிஃப்ட் ஆபரேட்டரான 60 வயது நபர், சிறுமியின் தாயாரிடம், சிறுமியை இனி தானே கவனித்துக் கொள்வதாகவும், அவள் லிஃப்டுக்குள் பத்திரமாக விளையாடுவாள், அதற்கு தான் பொறுப்பு என்று உறுதியாகவும், ஆறுதல் போலவும் கூறியதால் அதை நம்பிய சிறுமியின் தாயார் அவளை லிஃப்டில் விளையாட அனுமதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இப்படித்தான் சிறுமி வீட்டுக்கு வரத் தாமதமான ஒவ்வொரு முறையும் அவள் எங்கேயோ பாதுகாப்பாக விளையாடி விட்டு வருவதாக சிறுமியின் தாயார் நம்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.

பாடசாலை விட்டு வீடு திரும்பும் சிறுமி லிஃப்டில் தன் வீட்டுக்குச் செல்கையில் லிஃப்ட் இயக்குபவர் அல்லது இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றத் தயங்காத மிருகங்கள் ஒவ்வொருவரும் சிறுமியிடம், ‘அம்மா கூப்பிடறாங்க’ என்று சொல்லியே குடியிருப்பின் வெவ்வேறு இடங்களில் இருந்த காலி வீடுகள் அல்லது உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய செய்தி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Previous articleஅந்த மாமாவை தயவு செய்து விட்டுற சொல்லுங்கப்பா என கெஞ்சிய சிறுமி!
Next articleபுதிய வீடு வாங்கிய முன்னணி ஹீரோ! விலையை கேட்டால் உங்களுக்கு தலைசுற்றும்!