பெண்கள் விரும்பியவாறு மாங்கல்யம் கிடைக்க செய்யும் ராதை மந்திரம்.

0

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். சில பெண்களுக்கு ஜாதக ரீதியாக மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க அபிராமி அந்தாதியில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை சொல்லுவதால், அம்பிகையின் அருளால் அவர்கள் நீடித்த சௌபாக்கியத்துடன் இருப்பார்கள்.
மந்திரம்:

துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொடுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்
கனையும் கரும்பும் சிலையும் மென் பாசாங்குசமும் வகையில்
அனையுந் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே

அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.

Previous articleரிஷபம் ராசி 2018 விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்!
Next articleஇன்றைய ராசிபலன் 14.4.2018