அப்பா எனக்கு போன் செய்தார் என கண்ணீர்விட்ட அம்ருதா! வெட்டி சாய்க்கப்பட்ட கணவன்!

0
632

இந்தியாவில் தன் கண் முன்னே கணவன் கொடூரமாக வெட்டப்பட்ட காட்சியைக் கண்ட மனைவி, என்னுடைய கருவை நான் கலைக்க விரும்பவில்லை, இது அவர் எனக்க்கு கொடுத்த பரிசு என்று உருக்கமாக கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட ப்ரனாய் என்ற இளைஞர் ஆறு மாதங்களுக்கு பின்னர் பெண்ணின் குடும்பத்தாரால் மனைவி கண்முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காதல் கணவன் ப்ரனய் வெட்டிக் கொல்லப்பட்டதை பார்த்த மனைவி அம்ருதா அதிர்ச்சியில் சுய நினைவை இழந்ததால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ப்ரனாய் இறந்து போனதை முதலில் மருத்துவர்கள் அம்ருதாவிடம் சொல்லவில்லை. தன் கண் முன்னே கணவன் வெட்டப்பட்ட கொடூரக் காட்சியை பார்த்த நேரத்தில் அம்ருதா மயங்கிவிட்டார்.

இதனால் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவரிடம் மருத்துவர்கள் இந்த சம்பவம் குறித்து சொல்லவில்லை.

இன்று கணவர் இறந்த விடயத்தை மருத்துவர்கள் அவரிடம் கூறியுள்ளனர்.

அப்போது கணவனை நினைத்து கண்ணீர்விட்ட அம்ருதா, இதை நிச்சயமாக என்னுடைய தந்தை தான் செய்திருப்பார் என்று கூறியுள்ளார். அவர் என்னுடைய சொல்படி நீ கேட்கவில்லை என்றால், நான் ப்ரனாய்யை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வந்தார்.

என்னுடைய அலைபேசி எண்ணை என் தந்தை பிளாக் செய்த பின்னர் நான் அவரிடம் பேசவில்லை. கணவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு தான் என் தந்தை எனக்கு மீண்டும் போன் செய்தார்.

நான் போனை எடுக்கவில்லை. ப்ரனய் தாக்கப்பட்ட பிறகு நான் மீண்டும் அவருக்கு போன் செய்தேன். ஆனால், அவர் அலட்சியமாக பேசினார். மருத்துவமனைக்கு செல்வதற்கு முதல் நாளில்தான் எனது அம்மாவிற்கு போன் செய்து ப்ரனய் வீட்டில் நாங்கள் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ததாக கூறினேன்.

இந்தக் கொலைக்கு பின்னால் எனது தந்தையும், மாமாவும்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய கருவை நான் கலைக்க விரும்பவில்லை. ப்ரனய் எனக்கு அளித்துச் சென்ற பரிசாக நினைத்து அந்தக் குழந்தையை காப்பேன். ஒருபோதும் எனது தாய் தந்தையிடம் மீண்டும் செல்லமாட்டேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

அம்ருதா தற்போது மூன்று மாதக் கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகோபத்தில் கணவன் செய்த கொடூர செயல் !
Next articleயூடியூப்பில் வீடியோ பார்த்து குழந்தையை கொலை செய்த தாய்!