அப்துல் கலாமிற்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றியவர்!

0
451

அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவில் ஜனாதிபதியாக இருந்த போது கலந்துகொண்டநிகழ்ச்சி ஒன்றில் திறமையாக ”கீ போர்ட்” வாசித்த 10 வயது சிறுவனான ”ஹித்தேஷ் மஞ்சுநாத்திற்கு” பாராட்டி சிறப்பு விருது வழங்கியுள்ளார். “நீ என்னவாக மாற விரும்புகிறாய்?” என அப்துல் கலாம் கேட்டுள்ளார். அதற்க்கு அந்த சிறுவன் ஏ.ஆர்.ரகுமான் போல இசை அமைப்பாளராக வேண்டும்” என்று சொல்லியுள்ளார். “எனக்கு பிரமிஸ் பண்ணிக்கொடு” என்று கலாம் கேட்டற்கு சிறுவன் சத்தியம் செய்துள்ளார்.

அந்த ஹித்தேஷ் மஞ்சுநாத், அறிமுக இயக்குனர் கோபி இயக்கி உள்ள படத்தில் ”நானும் சிங்கிள்தான்” திரைப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அப்துல் கலாம் ஐய்யாவிற்கு கொடுத்த வாக்குப்படி இப்போது நான் இசை அமைப்பாளராகி விட்டேன். ரகுமான் மாதிரி ஆக, தொடர்ந்து முயற்சிப்பேன், உழைப்பேன் என ஹித்தேஷ் மஞ்சுநாத் கூறியுள்ளார்.

Previous articleநாசாவால் கூட முடியாத காரியம் !
Next articleதமிழுக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்.