பேட்ட படவிழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, பிறந்த குழந்தைக்கு அபிநந்தன் என பெயர் சூட்டினார்.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் கம்பீரமாக தாயகம் திரும்பினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் 50வது நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் மனைவி லதா பங்கேற்றார்.

அப்போது புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் விமானி அபிநந்தன் ஆகியோர் பெயர்களை மூன்று குழந்தைகளுக்கு அவர் சூட்டினார்.




