அபசகுணத்தின் வெளிப்பாடா? மஹிந்த பதவியேற்ற போது கீழே விழுந்த சிறிசேன!

0

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர கீழே விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கியமான தருணத்தில் அவர் கீழே விழுந்தது அபச குணத்திற்கான அறிகுறி என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றன.

பதவியை பொறுப்பேற்கும் போதே ஒருவர் கீழே விழுவதென்பது அபச குணத்தை குறிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் குறித்த செயலாளர் கீழே விழவில்லை எனவும், அவர் கீழே அமர்ந்திருந்த நிலையில் எழுந்தார் என கூறப்படுகின்றது.

கீழே இருந்து எழுந்திருக்கும் போது குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக மஹிந்த தரப்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசரும சுருக்கத்தைப் போக்கி இளமை தோற்றத்தை தரும் மஞ்சள்!
Next articleமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை ஓடஓட‌ விரட்டும் அழகு குறிப்புகள்.