நடிகை அனுஷ்கா தற்போது உடல் எடை அதிகம் கூடிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். கடைசியாக அவர் பாகமதி என்கிற படத்தில் தான நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது உடல் எடை குறைப்பதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அது முடிந்து எடை குறைத்தபிறகு தான் மீண்டும் சினிமாவில் நுழைவேன் என அவர் கூறியுள்ளார்.
முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். “எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை” என அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.