அனுஷ்காவோட உயரம் இப்போதா தெரியுது…. அனுஷ்காவின் அருகில் தம்மாதுண்டு போல இருக்கும் அஞ்சலி!
பாகுபலி படத்தில் ‘தேவசேனா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன்பக்கம் கட்டி இழுத்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. மேலும்,இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஷெட்டி. பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது அனுஷ்கா அவர்கள் நடித்த படங்கள் ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்து வரப்படுகிறது. நடிகை அனுஷ்கா அவர்கள் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா உடன் இணைந்து நடித்த ‘சூப்பர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா திரை உலகிற்கு அறிமுகமானர். பின்னர் தமிழில் ‘இரண்டு’ என்னும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து நடிகை அனுஷ்கா கடந்த 10 வருடங்களில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். துவக்கத்தில் இவர் கவர்ச்சி நாயகியாக நடித்தாலும் பின்னர் வரலாற்று புராண கதைகளில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இவரை அதிகமாக மக்களிடையே பிரபலமடைய வைத்தது “அருந்ததி” படத்தில் தான். மேலும், இந்த படத்திற்கு பிறகு ‘ருத்ரமாதேவி, பாகுபலி’ படம் இவரை வேற லெவல்ல தூக்கிவிட்டது கூட சொல்லலாம். இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி இவர் யோகா பயிற்சி ஆசிரியர். இதனை தொடர்ந்து நவம்பர் 7ம் தேதி அதாவது இன்று அனுஷ்கா அவர்களுக்கு பிறந்தநாள். மேலும், நடிகை அனுஷ்காவும்,நடிகை அஞ்சலியும் ஒன்றாக சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்து வந்தார்கள்.
மேலும், இது சம்மந்தமான புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்கள். அனுஷ்கா அவர்கள் நடிகை அஞ்சலியை தூக்கி கொண்டு எடுத்த போட்டோ பயங்கரமாக வைரலானது கூட சொல்லலாம். அது மட்டுமில்லாமல் அனுஷ்காவை கட்டிப்பிடித்து இருக்கும் அஞ்சலி புகைப்படத்தை பார்த்தால் நடிகை அனுஷ்கா இவ்வளவு உயரமானவரா! என ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு அவர் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அவர் கொடுத்த பதிலடியை பாருங்க. நடிகை அஞ்சலியை தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். ஏன்னா,அந்த அளவிற்கு அவருடைய குரலுக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.
இதனைத்தொடர்ந்து கடைசியாக அனுஷ்கா அவர்கள் நடித்த பாகமதி படத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. ஏன் என்றால் அனுஷ்கா உடல் எடை குண்டாக இருப்பதால் சினிமா உலகம் கண்டு கொள்ளவில்லை. பின்னர் அவர் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து ஒல்லியாக மாறிய புகைப்படத்தை பார்த்து இவருக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து உள்ளார்.இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஆகியோர் பல நடிகர்கள் உருவாகி வரும் படம் தான் “நிசப்தம்”.
இந்த படத்தில் அனுஷ்கா அவர்கள் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் ஓவியக் கலைஞராகவும் நடித்தும் உள்ளார்.மேலும், கோபி சுந்தர் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படம் திரை உலகிற்கு வரும் என்ற தகவலும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும்,4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது நிசப்தம் படம். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது.இந்நிலையில் ‘நிசப்தம்’ படத்தின் டீசரை நடிகை அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர்.