அந்தமான் ஃபூக்கெட் தீவில் ஜல்ஸா செய்த ரகுல் பிரீத் சிங்!

0

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகள் ஒருவரான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் அவருக்கு இருந்த மார்க்கெட் மொத்தமாக சரிந்து விட்டது.

தற்போது நடிகர் கமலுடன் சேர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவராகர்த்திகேயனுடன் ஒரு புது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 29 வது பிறந்தநாளை அந்தமான் ஃபூக்கெட் தீவில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடிய தனது பிறந்தநாள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், இது தான் எனக்கு தேவை, குடும்பத்தினருடன் இருக்கும் நேரம், குழந்தையாக இருப்பது, ஆடம்பரமாக இருப்பது மட்டும் தான்… இதை விட ஒரு சிறந்த நாளை நான் கேட்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழ் சிறுகதைகளின்’பிதாமகன்’ புதுமைப்பித்தன் !
Next articleஎனக்கு பாதுகாப்பு இல்லை: பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த காஜல் அகர்வால்!