பிரபல திரைப்பட நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
ஏய், கோவா, தமிழ்படம், படையப்பா, சின்னக்குயில் பாடுது போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் கோவை செந்தில்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் இவர் அதிகமாக நடித்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் கோவை செந்தில் திடீரென மரணமடைந்துள்ளார்.
அவருக்கு வந்த நோய் குறித்த விபரம் தெரியவில்லை.
பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள கோவை செந்திலின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





