அதிகாலையில் கோர விபத்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் பலி !

0
593

மதவாச்சி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் வஹாமலுகொல்லேவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்றும் பேருந்தும் மோதிக் கொண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் உயிரிழந்த மூன்று பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஇந்த ஒரே ஒரு தானம் உங்களின் 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்!
Next articleயாழ்ப்பாணத்தை கலக்கிய பலநாள் திருடன் சிக்கினான்!