அடுத்தடுத்த சிக்கலில் கல்கி பகவான் கைதாவாரா?

0

கல்கி பகவான் என்னும் சாமியார், கணக்கில் காட்டாமல் வெளிநாட்டு டொலர்கள் வைத்திருந்ததால் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலத்தை தலமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகின்றது. ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் இந்த ஆசிரமத்தை நிறுவி ஆன்மிகப் பணிகளைச் செய்து வருகிறார். வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து கல்கி பகவான் நடத்திவந்த நிறுவனங்களில் கடந்த 16-ம் திகதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

6நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஆவணங்களும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் சிக்கின.

இந்நிலையில், வெளிநாடுகளில் செய்த முதலீடு வருமான வரி சோதனையில் சிக்கிய அமெரிக்க டொலர்கள் உள்ளிட்ட காரணங்களால் ‘ஃபெமா’ எனப்படும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கல்கி பகவான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், கல்கி பகவான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசடலமாக கிடந்த 39 புலம்பெயர்ந்தவர்கள் உண்மையில் எப்போது உயிரிழந்தார்கள்? வெளியான முக்கிய தகவல் !
Next articleபிரபஞ்ச அழகியாக இந்திய பெண் தேர்வு! தாய்மை குறித்த என்ன கூறினார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்