அடுத்தடுத்து வெளியாகும் உண்மைகள்! சின்மயி டுவீட்டில் சிக்கிய பிரபல பாடகர் கார்த்திக்!

0
748

சின்மயி வெளியீடு வரும் பாலியல் புகார்கள் பற்றிய பிரபலங்கள் வரிசையில் தற்போது பாடகர் கார்த்திக்கும் சிக்கியுள்ளார்.

சின்மயி கடந்த சில தினங்களாக பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். இதில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண் வரிசையில் வரிசையில் தற்போது பாடகர் கார்த்திக்கும் தற்போது இணைந்துள்ளார்.

அந்த டுவீட்டில் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பதாவது

‘சில வருடங்களுக்கு முன் கார்த்திக்கோடு ஒரு பொது நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அப்போது அவர் எனது உடலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். என்னை தொட அடிக்கடி முயன்றார். எனக்கு பயங்கரமான அசௌகர்யத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தினார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரருகில் நிற்கவே நான் அஞ்சும் நிலைக்கு ஆளானேன். பல பாடகிகள் என்னிடம் கார்த்திக்கின் செய்கைகளைப் பற்றி கூறியுள்ளனர். அவர் சினிமா வட்டாரத்தில் பிரபலமாக இருப்பதால் வெளியே சொல்ல அனைவரும் அஞ்சுகின்றனர்’.

Previous articleஅழகிகள் மூவர் கைது! ஆயுர்வேத மசாஜ் நிலையத்தை சுற்றி வளைத்த பொலிஸார்!
Next articleவிடுதியில் வைரமுத்து மனைவி இளம்பெண்களிடம் கூறியது என்ன? அவர் அப்படித் தானா!