அடக்கொடுமைய! கடை திறப்பு விழாவிற்கு வந்து பாதியிலேயே தெறித்து ஓடிய ஸ்ருதிஹாசன்!
சென்னையில் பல் பொருள் அங்காடி ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை ஸ்ருதிஹாசன் பாதியிலேயே தெறித்து ஓடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை ஆவடி அருகே பிரபல தனியார் நிறுவனம் ஒன்று பல்பொருள் அங்காடி ஒன்றை நிறுவி அதனுடைய திறப்பு விழாவை நேற்று நடத்தியது. இதனை திறந்து வைக்க நடிகை ஸ்ருதிஹாசன் அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக அளவு ரசிகர்கள் கூட்டம் கூடியது. மேலும், இளவட்டங்கள் செல்போனை தூக்கிகொண்டு ஸ்ருதிஹாசனுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர்.இதனால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மேலும், கடையின் நான்காவது தளத்தில்பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த காரணத்தினால் எக்குதப்பாக ஏதாவது ஆகி விடப்போகிறதென்று நிகழ்ச்சியின் பாதியிலேயே தெறித்து ஓடி விட்டார் ஸ்ருதிஹாசன்.
கிராமப்புறங்களில் நடிகைகள் வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடுவது இயல்பு. ஆனால், சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட நடிகைகளை பார்க்க இப்படி இளசுகள் கூட்டம் கூடுவது என்பது வேதனையாக உள்ளது என்று கிசுகிசுத்தனர் அங்கிருந்த பெருசுகள்.