அஜித்துடன் நேருக்கு நேர் மோதும் சிவகார்த்திக்கேயன் மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 1ம் தேதி ரிலீசாகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கி வரும் படம் மிஸ்டர் லோக்கல். வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாகியுள்ளார் நயன்தாரா. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பொதுவாகவே சிவகார்த்திக்கேயன் படமென்றாலும் சரி, ராஜேஷ் படமென்றாலும் சரி காமெடிக்கு பஞ்சமிருக்காது. இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கும் படமென்பதால் நிச்சயம் காமெடி கச்சேரி களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி படம் கோடை விடுமுறையையொட்டி வரும் மே மாதம் முதல் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அஜித் பிறந்தநாளான அன்றைய தினம் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் தல 59 படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் இது. ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் ரிலீசானது. தற்போதும் அதே போல், சிவகார்த்திக்கேயனின் மிஸ்டர். லோக்கல் படம் அஜித்தின் தல 59 படத்துடன் ரிலீசாக இருக்கிறது. சொன்னபடியே இரண்டு படங்களும் ஒரே தேதியில் ரிலீசாகுமா அல்லது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் ‘அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா!
Next articleகருத்தரிக்க விரும்புவோர் உடலுறவுக் கொள்ள வேண்டிய நாட்கள்!