அஜித்தின் வலிமையில் கதாநாயகி நஸ்ரியா ?

0
616

மற்றும் வினோத் இணைப்பில் வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தில் நடிகை நஸ்ரியா நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிவருகிறது. திருமணத்துக்கு பிறகு மீண்டும் தமிழில் நஸ்ரியா தடம்பதிக்க வருகிறார் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு தல அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.

வலிமை திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏனைய நட்சத்திரங்கள் தொடர்பில் தேர்வு நடந்துவருவதாக சொல்லப்பட்டுள்ளது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

அருண் விஜய் அஜித்தின் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் நடிகை தலைமுடியை கட்டையாக வெட்டி புதிய அழகில் ஒரு போட்டோ பதிவிட்டிருக்கிறார். அதில் வலிமை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை வைத்தே இந்த கதை பரவி வருகிறது.

Previous articleகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020 மீனம் பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி !
Next articleபாலிவுட் நாயகி கத்ரீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா !யாரும் பார்த்திராத வீடியோ!