ஹோட்டல் பாத்ரூமில் தன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்: மனதை உருக்கும் சம்பவம்!

0
349

அமெரிக்காவின் Texas மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கணவர் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்ல அங்கேயே அவர் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த மனதை உருக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

Falon Griffinக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட அவரது கணவரான Robert அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

வழியில் Falonக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இருவரும் வழியில் இருந்த Chick-fil-A என்னும் ஹோட்டலுக்கு சென்றனர்.

ஹோட்டல் ஏற்கனவே மூடப்பட்டுவிட்ட நிலையிலும் Falonஇன் நிலைமை கண்டு இரக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அனுமதித்தனர்.

பாத்ரூம் சென்ற Falonக்கு அங்கேயே பிரசவ வலி அதிகரிக்க தாங்க இயலாமல் சத்தமிட்டுள்ளார்.

ஹோட்டல் ஊழியர் ஒருவர் Falonஇன் சத்தம் கேட்டு Robertக்கு தகவல் தெரிவிக்க அவர் பதறிச் சென்று பார்க்கும்போது குழந்தையின் தலை வெளியே வரத் தொடங்கி விட்டதைக் கண்டார்.

ஹோட்டல் மேனேஜரை அழைத்து அவசர உதவி ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு தன் மனைவியிடம் ஸ்வீட்டி, நாம் இங்குதான் நம் குழந்தையை வரவேற்க போகிறோம், என்று கூறிவிட்டு குழந்தையை கைகளில் ஏந்த தயாராகியிருக்கிறார்.

இந்நிலையில் குழந்தையின் தலையைச் சுற்றி தொப்புள் கொடி பலமாக சுற்றியிருப்பதைக் கண்டு அதிர்ந்தாலும், தன் மனைவியிடம் சற்று ரிலாக்ஸ் செய்யச் சொல்லிவிட்டு மெதுவாக அந்த கொடியை விலக்கி விட்டிருக்கிறார்.

இரண்டு நிமிடங்களில் குழந்தை Gracelyn அப்பாவின் கைகளில் தவழ்ந்திருக்கிறாள். தனது சட்டையைக் கழற்றி குழந்தையை பொதிந்து வைத்து விட்டு மூவரும் சற்று குளிரைப் போக்கிக் கொள்வதற்காக கிச்சனுக்கு சென்றிருக்கிறார்கள்.

15 நிமிடங்களுக்குப் பிறகு ஆம்புலன்ஸ் வர, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது.

இதற்கிடயில் தங்கள் ஹோட்டலில் Gracelyn பிறந்ததற்காக ஹோட்டல் நிர்வாகம் வாழ்நாள் முழுவதும் அவள் அங்கு இலவசமாக சாப்பிடலாம் என்றும் அவள் வளர்ந்த பிறகு அங்கேயே அவளுக்கு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதோடு நிற்காமல் Gracelynஇன் முதல் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஹோட்டல் ஊழியர்கள் இப்போதே தாயாராகி வருகிறார்கள் என்பது சுவாரஸ்யமான தகவல்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: