ஹைதராபாத் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் உடலில் ஒரு துப்பாக்கி குண்டு கூட இல்லை! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் !

0
962

ஹைதராபாத் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் உடலில் ஒரு துப்பாக்கி குண்டு கூட இல்லை! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் !

கடந்த வாரம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவரை வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நால்வரும் காவல்துறையினர் ஹைதராபாத் என்கவுண்டரில் இறந்த குற்றவாளிகளின் பிரேத அறிக்கை வெளியாகியுள்ளது அதில், விசாரணைக்கு அழைத்து செல்லும் போது தப்பி ஓட முயற்சி செய்ததால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நால்வரில் ஒருவரின் உடலில் கூட துப்பாக்கி குண்டுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த என்கவுண்டருக்கு பல தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் நீங்கள் எப்படி சுட்டுக் கொல்லலாம் என விமர்சித்து வந்தனர். இதனால், நீதிமன்றம் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. உடலை அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்க வேண்டும் எனவும் பிரேத பரிசோதனை செய்யப்படுவதை வீடியோவாக முழுவதும் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளிகள் நால்வரின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு நேற்று வெளியாகியுள்ளது.

ஆம், துப்பாக்கியால் சுட்டதில் குண்டுகள் அந்த குற்றவாளிகளின் உடலை துளைத்துகொண்டு சென்று வெளியில் விழுந்துள்ளன. அதிலும், குறிப்பாக முக்கிய குற்றவாளியான முகமது பாஷா உடலில் 4 துப்பாக்கி துண்டுகள் துளைத்துள்ளது என்றும் நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய மூவரின் உடலில் மூன்று துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும், அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் இல்லாத நிலையில், அந்த குண்டுகள் கிடைத்த பின்னரே யாருடைய துப்பாக்கியிலிருந்து சென்றுள்ளது என்பது தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரோபோ சங்கர் அவருடைய திருமணத்தின்போது எப்படி இருந்துள்ளார் தெரியுமா? வாயடைத்துபோன ரசிகர்கள் தீயாய் பரவும் புகைப்படம் !
Next articleமேயாத மான் மற்றும் பிகில் பட நடிகையான இந்துஜா முகத்தை மூடி விசில் அடித்து படம் பார்த்த வீடியோ ! யாரோட படம் தெரியுமா?