ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தொடர்பாக வெளியான தகவல்!

0

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தொடர்பாக வெளியான தகவல்!

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி மறுசீரமைக்கப்படவுள்ளது.

அதற்கமைய பொதுஜன முன்னணியின் தேசிய மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது.

அதன்போது கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நீக்கப்படவுள்ளார்.

டலஸ் ஆதரவு அணி உறுப்பினரான ஜி.எல்.பீரிஸிடமிருந்து பறிக்கப்படும் தவிசாளர் பதவி, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தலைவர் பதவியில் மகிந்த ராஜபக்சவும், பொதுச்செயலாளர் பதவியில் சாகர காரியவசமும் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

தற்போது தேசிய அமைப்பாளர் பதவி வகிக்கும் பசில் ராஜபக்ச, கட்சி மறுசீரமைப்பின் பின்னர் ஆலோசகர் மட்டத்தில் செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleலாஃப்ஸ் கேஸ் விலை விரைவில் குறைக்கப்படும்!
Next articleஇலங்கை அரசின் திட்டம்: பாடசாலைகளில் ஜப்பான் மொழி!