வைரலாகும் புகைப்படம்! ட்ரெண்டிங்கில் தோனி மனைவியும், கோலி மனைவியும்! ஏன் தெரியுமா!

0
492

இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனியின் மனைவியும் மற்றும் கோலியின் மனைவியும் முதல் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே பள்ளித் தோழிகள் என்பதற்கு சான்றாய் இணையத்தில் வெளிவிடப்பட்ட புகைப்படங்களால் தோனி, கோலி இருவரும் பெரும் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

அஸ்ஸாமின் செயிண்ட் மேரி பள்ளியில் அனுஷ்கா ஷர்மாவும், சாக்‌ஷி தோனியும் முதல் வகுப்பு படிக்கும்போது மாறுவேடப் போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, இந்த இரண்டு மாபெரும் கிரிக்கெட் வீரர்களது மனைவிமார்கள் இருவரும் ஒரே பள்ளியில் சிறுவயது முதலே ஒன்றாக படித்தவர்களா என்கிற ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் 2013-ல் ஒரு நிகழ்வில் சந்தித்துக்கொண்ட அனுஷ்கா ஷர்மா, சாக்‌ஷி இருவரும் ஒருவருடன் ஒருவர் எதார்த்தமாக பேசிக்கொண்டபோது, இருவரும் அஸ்ஸாமில் வாழ்ந்தது பற்றி பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அதன் பிறகு எந்த ஸ்கூல்? நானும் அதே ஸ்கூலில்தான் படித்தேன். நீங்கள் எந்த வருடம் படித்தீர்கள்? என்று பேசிக்கொண்டுள்ளனர்.

பின்னர் 1-ஆம் வகுப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒருவரை ஒருவர் பகிர்ந்துகொண்டபோதுதான் இருவருக்குமே, தாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அந்த புகைப்படத்தில் ஏஞ்சல் போல் கிரீடம் வைத்துக்கொண்டு சாக்‌ஷியும், பிங்க் நிற கவுனில் அனுஷ்கா ஷர்மாவும் நின்றுகொண்டிருக்கின்றனர்.

சிறுவயதில் ஒன்றாக படித்த அனுஷ்கா ஷர்மா மற்றும் சாக்‌ஷி இருவரும் பிற்காலத்தில் பெரும் வீரர்களும், நண்பர்களுமான ‘முறையே’ கோலி மற்றும் தோனியை மணந்துள்ளது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அனுஷ்கா ஷர்மா மற்றும் சாக்‌ஷி இருவரும் மீண்டும் சந்தித்துக்கொண்ட பிறகு ஒன்றாக நண்பர்களுடன் ஊர் சுற்றிய புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: