பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தை அதிரவைத்துள்ள நிலையில் இது போன்ற கொடூரங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிம்பு பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது போன்ற சம்பவத்தை தடுப்பது குறித்து சிம்பு பேசியதாக ஒரு வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்
அதில், உங்கள் பிள்ளைகளிடம் தினமும் 5 நிமிடம் பேசுங்கள். விருப்பம் இல்லாத பெண்ணை தொடுவது உங்க அம்மாவை தொடுவது போன்று என்று அனைத்து தாய்களும் மகன்களிடம் தினமும் சொல்லிப் பாருங்கள்.
அதன் பிறகு யாரும் தொடவே மாட்டான் என சிம்பு பேசியுள்ளார்.
Brother #STR ?? #RespectWomen #ArrestPollachiRapists #PollachiSexualAbuse pic.twitter.com/hWtXGeh3y1
— STR Simbu ? (@Actor_SimbuFC) March 12, 2019