வேலைக்கு சென்ற தமிழர்கள் மீது சவுதியில் துப்பாக்கி சூடு!

0
216

சவுதி அரேபியால் மீன்பிடி தொழில் செய்து வந்த 3 தமிழகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்மைலின், விஜயன் , விவேக் மற்றும் செழியன் ஆகிய 4 பேரும் சவுதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

இவர்கள் வழக்கம்போல விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற ஈரான் கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் ஸ்மைலின், விவேக், செழியன் ஆகிய மூவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. உடனே, மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

தொடர்ந்து, காயம் அடைந்த 3 பேரும் சவுதி அரேபியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஸ்மைலின் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயம் அடைந்த மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர வெளியுறவுத்துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: