வேறொரு பெண்ணுடன் வீடியோ எடுத்து அனுப்பிய கணவன்! ஆண்மையில்லாதவன் என கூறிய மனைவி:

0
348

ஆண்மை இல்லாதவன் என்று கூறிய மனைவியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலத்தில் தனது மனைவி தன்னை ஆண்மையில்லாதவன் எனக்கூறி விவாகரத்து கேட்ட காரணத்தால் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை எடுத்து அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

விபாவசு – அனுஷா ஆகிய இருவருக்கும் 2016 ஆம் வருடம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சி பலமுறை நடைபெற்றும் அது பலனளிக்காத காரணத்தால், மனைவி அனுஷா விவாகரத்து கோரியுள்ளார்.

விவாகரத்து மனுவில் , தனது கணவர் ஆண்மை இல்லாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்,

இதனால் அனுஷாவின் உறவினர்கள் விபாவசுவை தவறாகப் பேசியுள்ளனர். இதனால் கடுப்பான அவர், தான் ஆண்மையுள்ளவன் என்பதை நிரூபிக்க , மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோவாக எடுத்து, அனுஷாவின் பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து பொலிசார் விபாவசுவை கைது செய்து விசாரித்தனர். அவர் அந்த வீடியோவை அனுப்பியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து பொலிசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: