ஏழே நாட்களில் அழகாக மாற ஆசையா? தினமுன் 10 நிமிடம் இதை செய்யுங்க!

0
8518

ஒவ்வொருவருக்குமே நாம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாக மாற அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பார்கள். அழகு என்பது வெளிப்புறத் தோற்றத்தில் இல்லாவிட்டாலும், இன்றைய காலத்தில் அழகாக காணப்படாவிட்டால், யாரும் மதிக்கவேமாட்டார்கள்.

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க!

மேலும் பலர் அழகு என்பது வெள்ளையாக இருந்தால் தான் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அழகு என்பது சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல், சருமத்தை அழகாக மென்மையாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளது.

அதற்காக தினமும் 10 நிமிடம் செலவழித்தாலே போதும், சருமமானது அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும். வெள்ளையாக மாற பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்களால் ஏற்படும் பக்க விளைவுகள்! அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தாலே, நல்ல அழகான சருமத்தைப் பெறலாம்.

1 எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

2 எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

3 எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

4 ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

5 பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.

6 வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

7 ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

8 எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

9 தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறிய பின் வெது வெதுப்பான நீரீல் முகம் கழுவினால் முகப்பரு தொல்லை வராது. முல்தானி மெட்டி பொடியுடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி 10, 15 நிமிடம் ஊறியபின் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

10 பழுத்த பப்பாளியை மிக்ஸியில் அரைத்து எலுமிச்சை பழ ஜீஸ் விட்டு கலந்து முகம் உடலில் தடவி ஊறியபின் தேய்த்துக் குளித்தால் மருக்கள் கரும்புள்ளிகள் மறையும்.

11 பப்பாளி தோலினை அரைத்து முகத்தில் தடவி மஜாஜ் செய்து கொண்டால் சருமம் மற்றும் முக சுருக்கத்திற்கு குட்பை சொல்லிவிடலாம். அவை வராமலும் தடுக்கவும் செய்யும்.

12 முகம் சருமம் வரண்ட சருமமாக இருந்தால் பாலில் அரிசி மாவைக் கரைத்து அல்லது குழைத்து தடவி 1/2 மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லுங்கள் உதிர்ந்து விடும். சருமம் ட்ரை ஆகாது.

13 விட்டமின் ஈ ஆயிலை அல்லது ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் ஏதாகிலும் ஒன்றை தொடர்ந்து புருவத்திலும் இமையிலும் தடவி வந்தால் புருவம் இமை முடி கரு கரு என்று வளர்ந்து அழகு கொடுக்கும்.

14 முகம் சருமம் சாப்ட் ஆக இருக்க பாசிப்பருப்பு அல்லது கடலை பருப்பு அரைத்து வைத்துக் கொள்ளவும். ஏதாகிலும் ஒரு மாவைசிறிது தயிருடன் கலந்து முகத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து சருமம் முகம் பட்டுபோல் சாப்ட் ஆகிவிடும்.

15 கறிவேப்பிலை இளம் தளிர் இலைகளைத் காய வைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கரு கரு என்று வளரும்.

16 வெந்தயத்தை ஊற வைத்து கறிவேப்பிலை இலை சேர்த்து அரைத்து தலையில் தடவி 10 நிமிடம் ஊறியபின் தலை தேய்த்துக் குளித்து வந்தால் முடி சாப்ட் ஆகி பட்டு போன்றும் வேர்க்கால் பலம் பெற்று முடி உதிராது வளரும்.

17 புளிப்பு தயிர்2 ஸ்பூன் கடலை மாவு கலந்து தலையில் தடவி ஊறிய பின் தலை தேய்த்துக் குளித்தால் அழுக்குகள் நீங்கும்.

18 தலை முடி நன்கு வளர முருங்கை இலை சூப் வைத்து தினசரி குடித்து வரலாம். தலை முடியும் வளரும். முடியும் உதிராது. வழுக்கை தேங்காய் அரைத்து தலையில் தடவி ஊறியிபின் சீயக்காய் பொடி தேய்த்து தலை அலசி குளித்து வந்தால் முடி உதிராமல் பாதுகாக்கலாம்.வழுக்கை தேங்காய் கமுகை தேங்காயும் தேய்த்து அலசலாம்.

19 ஆப்பிள் சாறு வெந்தயத்தூள், சீயக்காய் தூள் ஆகியவற்றை சம அளவு எடுத்து வெந்நீரில் கலந்து தடவி ஊறிய பின் தலை தேய்த்து அலசினால் முடி பிசு பிசுப்பு நீங்கி விடும்.

20 சாதம் வடித்த பழைய கஞ்சியில் சீயக்காய் பொடி கலந்து தடவி குளித்தாலும் உடல் சூடு தணியும். சூட்டினால் முடி கொட்டுவது நிற்கும். முடியும் அழுக்கி நீங்கி பட்டுபோல பிரகாசமாக இருக்கும்.

ஆரோக்கியமான முறையில் அழகாக ஜொலிக்க சில சூப்பர் டிப்ஸ்!!!

என்றென்றைக்கும் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மனதில் குடிக்கொண்டிருக்கும் கனவாகும். சருமத்தையும், தலை முடியையும் உடலுடன் சேர்த்து முறையாக பராமரித்தால், அழகும் தோற்றமும் பலமடங்கு கூடும். அழகு மேம்பட பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட அதற்கு பாடுபடுவது இயல்பாக நடப்பது தான்.

இன்றைய காலகட்டத்தில் சந்தையில் பல அழகு சாதனங்கள் குவிந்துவிட்டன. ஆனால் அவைகளை பல பொருட்களில் இரசாயனங்கள் கலந்துள்ளதால், அவை ஆரோக்கியத்தை பாதித்துவிடும். அப்படி ஆரோக்கியம் கெட்டுப் போகாமல் இருக்க இயற்கை முறையை தேர்ந்தெடுங்கள்.

அழகான சருமத்தை பெறுவதற்கு பணத்தையும், நேரத்தையும் தண்ணீரை போல் செலவளிப்பவர்கள் பலர் உண்டு. அதில் சிலர் பயன் பெறுவார்கள், சிலர் எந்த பயனும் அடைவதில்லை. சில முயற்சி தவறான விளைவுகளை கூட ஏற்படுத்திவிடுவதுண்டு.

இவ்வகை எதிர்மறையான விளைவுகள் மற்றும் பண விரயத்தை தவிர்க்க இயற்கை வழிகளை கையாண்டு உடலையும் சருமத்தையும் பாதுகாத்திடுங்கள். அதற்கு நாங்கள் கூறும் டிப்ஸ்களை பின்பற்றி, உங்கள் அழகை மெருகேற்றி, கண்ணாடி முன் நின்று, உங்கள் மேல் நீங்களே காதலில் விழுந்து கொள்ளுங்கள்.

உடலில் உள்ள இறந்த உயிரணுக்களை நீக்கவும், அவை மீண்டும் வராமல் இருக்கவும், சீரான முறையில் உடலை ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் இயற்கையான ஸ்க்ரப் வேண்டுமென்றால், தேன் மற்றும் சர்க்கரையை கலந்து அதனை பயன்படுத்துங்கள்.

தினமும் 8 முதல் 10 டம்பளர் வரை தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். இது உடல் வறட்சியைத் தடுத்து, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

உடலில் வியர்வை அதிகளவில் வெளிவருகிறதா? அப்படியானால் தினமும் இரண்டு முறையாவது குளியுங்கள். நன்றாக குளித்தால், உங்களை குளிர்ச்சியுடன் வைத்து, ஆரோக்கியமாக இருக்கச் செய்யும். முக்கியமாக குளித்த பின், லூசான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். அது சருமத்தை சுலபமாக மூச்சு விட வைக்கும்.

அதிகமாகும் வெப்பமும், மாசும் தலை முடியை வெகுவாக பாதிக்கும். முடியை நல்ல விதமாக பராமரிக்க, உங்கள் வசதிக்கேற்ப நல்ல ஷாம்புவைப் பயன்படுத்துங்கள். முடிக்கு ஷாம்பு போடும் போது, கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது தலையில் பதிந்திருக்கும் அழுக்கையும், மாசுவையும் நீக்கிடும்.

வாழ்க்கையில் எப்போதும் பின்பற்ற வேண்டியது ஒன்று இருக்கிறது என்றால், அது தினமும் ஒரு நல்ல சன் ஸ்க்ரீனை பயன்படுத்துவது தான். அதிலும் சரும வகையை பொறுத்து, அதற்கேற்ப ஒரு நல்ல சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்தினால், அலர்ஜி மற்றும் சரும சிராய்ப்புகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

எப்போதும் காற்றோட்டமுள்ள ஷூக்களை அணியுங்கள். அது பாதங்களுக்கு முறையான காற்று சுற்றோட்டத்தை அளிக்கும். அதனால் பாதங்களில் இருந்து, வாடை அடிக்காமலும், பூஞ்சை தொற்றுகள் உருவாகாமலும் இருக்கும்.

தயிர் உட்கொள்வதை அதிகரித்தால், சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், வயதாவதையும் தாமதப்படுத்தும். மேலும் தயிரை சருமம் மற்றும் தலையில் தடவி வந்தால், வெப்பத்தால் பாதிப்படைந்த இடங்களை வழுவழுப்பாக மாற்றலாம்.

நீங்கள் ரேசர் பயன்படுத்துபவரா? அப்படியானால் அதனை கைகள் மற்றும் கால்களில் பயன்படுத்துவதற்கு முன்னால் குறைந்தது 3 நிமிடங்களுக்காவது வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளுங்கள். இதனால் வெதுவெதுப்பான நீர் மயிர்த்தண்டுக்களை மென்மையாக்கும். இது நீண்ட நேரத்திற்கு வழுவழுப்பையும் அளிக்கும்.

ஷேவிங் எல்லாம் முடிந்த பின்பு, ஏதாவது இயற்கை லோசனை கொஞ்சமாக தண்ணீரில் சேர்த்து, முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். சில்க் துணியில் வழுவழுப்பான தலையணை உறையை பயன்படுத்துங்கள். அதுமுடிகளின் புறத்தோல் மற்றும் தலையணை உறைக்கும் இடையே உருவாகும் உராய்வை தடுக்கும்.

சுலபமாக கருமையாகும் சருமத்தை கொண்டவர்கள், இந்த பிரச்னையை சரிசெய்ய, இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள். அதிலும் முட்டையின் வெள்ளை கருவை, சோள மாவு மற்றும் எலுமிச்சை ஜஸ் உடன் கலந்து கொள்ளுங்கள். அல்லது சின்ன உருளை கிழங்கு துண்டு அல்லது எலுமிச்சை ஜூஸை பாதிக்கப்பட்ட இடங்களில் தேயுங்கள். இவைகள் வேலை செய்யவில்லை என்றால், ஒரு நல்ல சரும மருத்துவரை உடனே அணுகுங்கள்.

தலையை எப்போதும் தொப்பியால் மூடியிருக்கிறீர்களா? அப்படியானால் சருமத்தில் உள்ள எண்ணெய்கள் அடைபட்டு, நெற்றியில் பருக்கள் வந்துவிடும். அதனை தடுக்க நெற்றியை நன்றாக துடைக்க வேண்டியது அவசியம். பாதங்களை மூடிய ஷூக்குள் விடுவதற்கு முன்னால், எப்போதும் பூஞ்சையை அழிக்கும் பொடியை பயன்படுத்துங்கள்.

இதுபோக இறந்த அணுக்களை நீக்கவும், பாத சருமம் மீண்டும் உயிர் பெறவும் மெருகேற்ற உதவும் கல்லை பாதங்களுக்குப் பயன்படுத்துங்கள்.

ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெற புரதம் அதிகமுள்ள இறைச்சி, முட்டைகள், பருப்புகள், பால் மற்றும் பாலாடை கட்டிகளை உண்ணுங்கள். இந்த உணவுகள் எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

அழகாக இருக்க வேண்டுமா? போதுமான தூக்கத்தை பெற்று தேவையான அளவு தண்ணீரை பருகுங்கள். இவை இரண்டுமே நச்சுத்தன்மையை நீக்கி, வீங்கிய சிவந்த கண்களை சரி செய்வதால், சருமத்தை ஒளி வீசச் செய்யும்.

முகத்திற்கு மேக்-அப் போடும் போது, அவை மிகவும் குறைவாக இருக்க வேண்டும். அதிகமாக போடும் போது, அவை சரும துவாரங்களை அடைத்துவிடும். அதனால் சருமம் சுருக்கம் அடைந்து, பொலிவிழந்து போகும்.

மேலும் தூங்கச் செல்லும் முன், முகத்தில் தடவிய பவுண்டேஷன் பவுடரை முழுமையாக நீக்க மறந்து விடாதீர்கள். சரும வகையை பொறுத்து ஒரு க்ளென்சர் மற்றும் டோனரை பயன்படுத்துங்கள். கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங் ஆகிய மூன்றையும் தினமும் செய்யுங்கள்.

அழுக்கு கைகளை கொண்டு, அடிக்கடி முகத்தை தொடுவதனால் பருக்கள் உண்டாகும். அதனால் வெளியில் இருக்கும் போது, கையில் இருக்கும் சானிடைசரைப் பயன்படுத்தி, அடிக்கடி கையை கழுவுங்கள். குறிப்பாக கையை முகத்திலிருந்து எப்போதும் தள்ளியே வைத்திருங்கள்.

தோல் உரிக்க பயன்படுத்தப்படும் எக்ஸ்போலியேட்டர் ஒன்றை வாரம் ஒரு முறையாவது பயன்படுத்துங்கள். இது சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி சருமத்தை பளபளக்கச் செய்யும்.

முடியை நீரில் அலசிய பின் நல்ல கண்டிஷனரை பயன்படுத்தி முடிக்கு தடவுங்கள். இது தலைமுடியை வறட்சி அடையாமல், மாசு காற்றினால் பாதிப்படையாமல் பாதுகாக்கும். மேலும் முடியை காய வைக்க ஹேர் ட்ரையர் மற்றும் ப்லோயரை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்.

கவர்ச்சியான முதுகை பெற, முதுகை சீரான முறையில் தேயுங்கள். அதிலும் பப்பாளியை கொண்டு செய்த கலவையை சருமத்தில் தடவி, 5-10 நிமிடம் வரை ஊற வையுங்கள். இது முதுகில் உள்ள இறந்த அணுக்களை மற்றும் அழுக்கினை நீக்க உதவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: