வெள்ளைப்படுதல் நோயை குணமாக்கும் பழம்பாசி!

0
586

பழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதயவடிவான இலைகளை கொண்டது. இதன் இலை பசிய இலையையுடைய சிறு செடி. பழம்பாசி இலைகளே மருத்துவ பயனுடையது.

பழம்பாசியினால் காமாலை, மாந்தம், கணச்சூடு, கட்டி, சோகை, ஊதுகணம், மூலம், சீதபேதி முதலியவை அடியோடு அழிக்கும் தன்மை கொண்டவை.

பழம்பாசியின் மருத்துவபயன்களை பற்றி பார்ப்போம்.

பழம்பாசி இலைகளைப் பறித்து நன்கு அலசி, சீரகத்துடன் அரைத்து நீர் அல்லது மோரில் கலந்து தினமும் காலையில் காபி டீ குடிப்பதற்கு முன் குடித்துவர, வெள்ளைப் படுதல் பாதிப்பு சரியாகிவிடும்.

பழம்பாசி இலைகளை தூளாக்கி, அத்துடன் சீரகத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கலந்து, தினமும் இதில் தேக்கரண்டியளவு எடுத்து, மோரில் அல்லது நீரில் கலந்து சாப்பிட்டுவர, உடல் உறுப்பு சூடு குணமாகி, உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.

உள்ளங்கையளவு பழம்பாசி இலைகளை நன்கு அலசி, பாலில் சூடாக்கி, வடிகட்டி, அந்தப்பாலில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து, தினமும் இருவேளை குடித்துவர, மூலச்சூடு குணமாகும்.

பழம்பாசி இலையை பாலில் கலந்து சூடாக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு சில துளிகள் மற்றும் தேன் கலந்து பிள்ளைகளுக்கு, தினமும் இருவேளை கொடுத்துவர, உடல் சூட்டால் ஏற்பட்ட வயிற்றுக்கழிச்சல், தீரும்.

பழம்பாசி இலைகளை அரைத்து, அரிசி மாவுடன் கலந்து ஆலக்கரண்டியில் இட்டு சிறிது நீர் ஊற்றி, நல்ல மாவுப்பதத்தில் திரண்டு வந்ததும், ஆறவைத்து பொறுக்கும் சூட்டில், கட்டிகளின் மேல் வைத்து பருத்தித் துணியால் கட்டி இரவில் உறங்கிவர, வலி கொடுத்த கட்டிகள், உடைந்துவிடும்.

பழம்பாசி இலைகளை உலர்த்திப் பொடியாக்கி, அத்துடன் வறுத்து இடித்த ஜீரகம் மற்றும் வெந்தயம் இவற்றை ஒன்றாக்கி வைத்துகொண்டு, தினமும் காலையும் மதியமும் ஒரு தேக்கரண்டி அளவு இந்தப் பொடியை எடுத்து மோரில் கலந்து குடித்துவர, நாளடைவில், சிறுநீர் இயல்பாகக்கழியும்.

உடல்நலம் தேறி, மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.

பழம்பாசியை உலர்த்தி இடித்து தூளாக்கி, அதை தினமும் நீரில் அல்லது மோரில் கலந்து இருவேளை சாப்பிட்டுவர, தொங்கும் ஊளைச்சதை கரைந்து விடும்.

பழம்பாசி இலைகளை நீர்விட்டு அரைத்து, கெட்டியான திரவப்பதத்தில், தலையில் நன்கு அழுத்தி தேய்த்து ஊறவைத்து, சற்று நேரம் கழித்து குளித்துவர, உடலில் இருந்த சூடு நீங்கி, உடலில் புத்துணர்ச்சி தோன்றும்.

பழம்பாசி மூலிகை வேர்களை சேகரித்து, விளக்கெண்ணை அல்லது நல்லெண்ணையில் சூடாக்கி, அந்த எண்ணையை, ஆறாத புண்களில் தடவிவர, புண்கள் விரைவில் ஆறிவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: