வெள்ளவத்தையில் பொலிஸார் முன்னெடுக்கும் நடவடிக்கை! ஜனாதிபதியின் உத்தரவு!

0
396

வெள்ளவத்தையில் பொலிஸார் முன்னெடுக்கும் நடவடிக்கை! ஜனாதிபதியின் உத்தரவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய உத்தரவுக்கு அமைய சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக விசேட திட்டமொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சுற்றாடலை பாதுகாத்து அழகுபடுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும்படி ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிணங்க, பொலிஸ் நிலையங்களிலுள்ள சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுற்றாடல் பிரிவுகள் மறுசீரமைக்கப்படுகின்றன. இந்த பொலிஸ் சுற்றாடல் பிரிவுகளை நான்கு உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் மேற்பார்வை செய்வர்.

சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டம் கொழும்பு சுகந்திர சதுக்கத்திற்கு அருகாமையிலும் காலிமுகத்திடல் மற்றும் புறக்கோட்டை அரச மரத்தடியிலும் ஒரே நேரத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. அதேவேளை சுற்றாடலை பாதுகாப்பதற்கான மற்றுமொரு முயற்சியாக கொள்ளுபிடிய தொடக்கம் வெள்ளவத்தை வரையான கடலோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய குறித்த நடவடிக்கைகள் இன்று காலை 6.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: