தொழிநுட்ப பிரச்சினை காரணமாக யூடியூப் இணையத்தளம் முடங்கியிருந்த நிலையில் தற்பொழுது இயங்க ஆரம்பித்துள்ளது.
சர்வர் தொடர்பான பிரச்சினை காரணமாகவே யூடியூப் இணையதளம் முடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், யூ டியூப் சரியாக இயங்கவில்லை என நீங்கள் தந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூடியூப் டிவி, யூ டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் இதனை சரிசெய்த பின்பு தகவல் தெரிவிக்கப்படும். இடையூறு ஏற்பட்டுள்ளதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என யூடியூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: