வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

0
335

இலங்கையர்களுக்கு சவுதி அரேபியாவினால் விதிக்கப்பட்ட சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் தொழில் விசா பெற்றுக் கொள்ளும் போது சிறந்த சுய சான்றிதழ் ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டது.

எனினும் இந்த சட்டம் தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் ஆகியவற்றிற்கான இலங்கை துணைத் தூதரகம் நேற்று அறிவித்துள்ளது.

எமிரேட்ஸ் வெளிவிவகார நடவடிக்கை மற்றும் சர்வதேச ஆதரவு தொடர்பான அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் ஆகியவற்றிற்கான இலங்கை துணைத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விசா பெற்றுக் கொள்ளும் போது சிறந்த சுய சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக அவசியம் மீளவும் அறிவிக்கும் வரை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு பணியாளர்களும் அந்த நாட்டில் தொழில் விசா பெற்று கொள்ளும் போது சுய சான்றிழ் சமர்ப்பிக்க வேண்டும் என அண்மையில் அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

எனினும் இந்த புதிய சட்டத்தினால் பல தூதுவர்கள் சிரமங்களுக்கு உள்ளாகுவதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: