இந்த ராசிக்காரர்கள் கடவுளுக்கு வெற்றிலை வைத்து வழிபடுங்கள்!

0
7770

ஜோதிடத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளுக்கு வெற்றிலையை வைத்து வழிபட்டால், தங்களின் துன்பங்கள் விலகி போகும் என்று கூறும் ராசிகளை பற்றி பார்ப்போம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு வந்தால் அவர்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிபட்டு வந்தால், அவர்களின் துன்பங்கள் அனைத்தும் விலகி இன்பங்கள் அதிகமாகும்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து, புதன் கிழமை அன்று அவர்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட்டால், துன்பம் அனைத்தும் விலகிவிடும்.

கடகம்
கடகம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை அன்று காளி தெய்வத்தை வழிபட்டால், அவர்களின் கஷ்டங்கள் விலகும்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து, வியாழக்கிழமை அவர்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து, வியாழக் கிழமை அன்று அவர்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வந்தால், கவலைகள் அனைத்தும் தீரும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக் கிழமை அன்று இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வந்தால், துன்பம் அனைத்தும் தீரும்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் பேரிச்சப்பழம் வைத்து செவ்வாய் கிழமை அன்று இஷ்ட தெய்வத்தை வழிபட்டால், வாழ்க்கையின் துயரம் அனைத்தும் நீங்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன் கிழமை அன்று இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும்.

மகரம்
மகரம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து, சனிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டால் வாழ்க்கையின் கவலை நீங்கும்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் நெய் வைத்து, சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டால், கவலை தீரும்.

மீனம்
மீனம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் சர்க்கரை வைத்து, ஞாயிற்றுக் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வந்தால், உடல் நோய் பிரச்சனைகள் குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: