பணக்கஷ்டம் தீரனும்னா 12 ராசிகளும் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம் இதுதான்!

0
5184

துன்பம் விலக உங்க ராசியின்படி இந்த மாதிரி வெற்றிலை பரிகாரம் செய்ங்க

என்ன வெற்றிலையில் பரிகாரமா என்று யோசிக்கிறீர்களா?… வெற்றிலை என்பது எப்பொழுதுமே நேர்மறை அதிர்வுகளையும் எண்ணங்களையும் உண்டாக்குபவை.

அதனால் தான் வெற்றிலையை நீங்கள் வணங்கும் அல்லது சில நன்மைகளை நமக்குத் தேடித் தருகின்ற கடவுளின் முன்பாக வைத்து படைத்து பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இதுவரை இருநு்து வந்த பொருளாதாரக் கஷ்டம், வாழ்க்கையின் இருக்கின்ற மற்ற பிரச்னைகளும் தீர்ந்து போகும்.

வெற்றிலை பரிகாரம்
வெற்றிலை பரிகாரத்தில், எல்லோரும் ஒரே மாதிரியான பரிகாரத்தைச் செய்தால் பயன் தராது. அவரவர் ராசிக்குத் தகுந்தபடி, சில இஷ்ட தெய்வங்களையும் சில கிரக தெய்வங்களையும் பொருத்து உங்களுடைய பரிகாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு என்ன கஷ்டமோ அது சரியாக நீங்கி, உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆம். உங்களுடைய ராசியின்படி வெற்றிலையில் குறிப்பிட்ட கிழமையில் பரிகாரம் செய்தால் உங்கள் துன்பம் விலகும். பிரச்சனைகள் தீரும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் வெற்றிலைக்குள் மாம்பழத்தை வைத்துப் படைத்து, முருகப் பெருமானை வழிபட்டு,பின் அதை எடுத்து சாப்பிட்டு வந்தால் துன்பங்கள் அத்தனையும் தீரும்.

ரிஷபம்
செவ்வாய்க் கிழமைகளில் ராகுவை வழிபடுவது சிறந்தது. அதனால் ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில், வெற்றிலைக்குள் சிறிது மிளகினை வைத்து, ராகுவை வணங்கி விட்டு, வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட வேண்டும். அப்படி செவ்வாய்தோறும் சென்று வர, துன்பங்கள் நீங்கும்.

மிதுனம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நேர்மறை அதிர்வுகள் நிரம்பிய புதன் கிழமையில், நீங்கள் மனதுக்குள் நல்ல விஷயங்கள் எதை வேண்டுமானாலும் நினைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வந்தால், நீங்கள் நினைத்தது நடக்கும். அதனால் மிதுன ராசிக்காரர்கள் புதன்கிழமையில் வெற்றிலையில் வாழைப்பழத்தை வைத்து, மனதுக்குள்ளோ அல்லது உருவப் படத்தின் முன்னோ உங்களுடைய இஷ்ட தெய்வத்தை வைத்து வணங்கினால் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பனி போல விலகிவிடும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வெள்ளிக் கிழமை தான் மிகவும் உகந்த நாள். அதனால் வெள்ளிக் கிழமையன்று காளி தேவியை வழிபட்டு, வெற்றிலைக்குள் மாதுளம் பழத்தை வைத்து வணங்குங்கள். அதன்பின் மாதுளம்பழத்துடன் வெற்றிலையைச் சேர்த்து வைத்து சாப்பிடுங்கள். உங்களுக்கு இருந்த கஷ்டங்கள் யாவும் தீர்ந்து போகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாழக் கிழமை மிகவும் உகந்த நாளாகும். அதேபோல், குரு பகவானும் உங்களுக்கு உகந்த கிரகங்களுள் ஒன்று. அதனால் வெற்றிலையில் வாழைப்பழத்தை வைத்து, தட்சிணா மூர்த்தியையோ அல்லது உங்களுடைய இஷ்ட தெய்வத்தினையோ வணங்கி விட்டு, வெற்றிலையுடன் சேர்த்து அந்த வாழைப்பழத்தைச் சாப்பிட்டால், உங்களுடைய மனக்கஷ்டம், பணக்கஷ்டம் ஆகியவை தீரும்.

கன்னி
உங்களுடைய ராசி கன்னி ராசியாக இருந்தால், குருவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையன்று வெற்றிலைக்குள் கொஞ்சம் மிளகினை வைத்து மடித்து, உங்களுடைய இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, அந்த மிளகை வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட துன்பம் விலகும்.

துலாம்
நீங்கள் துலாம் ராசிக்காரர்களாக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம் என்னவென்றால், வெற்றிலைக்குள் சிறிதளவு கிராம்பை வைத்து மடித்து, அதை வெள்ளிக்கிழமையில் உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் முன்னால் வைத்து, வழிபட்டு பின்,அந்த பரிசாதத்தைச் சாப்பிட்டால் துன்பங்கள் மறையும்.

விருச்சிகம்
நீங்கள் விருச்சிக ராசிக்காரர்களாக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம் இதுதான். வெற்றிலைக்குள் ஓரிரு பேரிச்சம்பழத்தை வைத்து மடித்து, செவ்வாய்கிழமையில், உங்களுடைய இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, பின் அந்த பேரிச்சை பழத்தையும் வெற்றிலையையும் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் துயரங்கள் குறையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! உங்களுடைய வெற்றிலை பரிகாரம் என்ன தெரியுமா?… வெற்றிலைக்குள்ளாக சிறிதளவு கல்கண்டை வைத்து மடக்கி, வியாழக்கிழமைகளில் உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் முன் வைத்து வழிபட்டு பின் அதை சாப்பிட்டு வரலாம். இதை வியாழக்கிழமைகளில் செய்வது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களே உங்களுடைய வெற்றிலை பரிகாரம் என்பது, சனிக்கிழமைகளில் வெற்றிலைக்குள் சிறிதளவு அச்சு வெல்லத்தினை வைத்து மடக்கி, அதை காளி தெய்வத்துக்கு முன்பாக வைத்து படைக்க வேண்டும். பின் பூஜைகளை செய்து முடித்து பின்பு, அந்த வெற்றிலையை வெல்லத்துடன் சேர்த்து வைத்து சாப்பிட வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் தான் இஷ்ட கிரகம். இருப்பினும் நீங்கள் காளி தெய்வத்தினை வழிபடுவது நல்லது. கும்ப ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம் என்னவென்றால், கும்ப ராசிக்காரர்கள் வெற்றிலைக்குள் சிறிதளவு நெய்யினை வைத்து, அதை மடக்கி காளி தெய்வத்தின் முன்பாக சனிக்கிழமை நாட்களில் வைத்து வழிபட்டு வந்தால், உங்கள் மனக்கவலைகள் தீரும். பொருளாதாரம் பெருகும்.

மீனம்
ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களுடைய இஷ்ட தெய்வத்தினை வழிபட்டு வெற்றிலைக்குள் சிறிதளவு நாட்டுச் சர்க்கரையைப் படையல் வைத்து, பின் அதை எடுத்து சாப்பிட்டால் உடல் நோய்கள் முழுமையாகத் தீரும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களுடைய குணநலன்கள் பற்றி உங்கள் இரத்த பிரிவு சொல்வது என்ன!
Next articleஆண்மையை அதிகரிக்க செய்யும் வெண்டைக்காய்!