விரைவாக முயற்சித்தால் பலன் நிச்சயம்! பானை வயிறையும் கரைக்கும் அற்புத பானம் !

0
7693

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவுமுறையை பின்பற்றுவது தான்.

ஜங்க் உணவுகளை தினமும் போதிய அளவில் உடற்பயிற்சியின்மை இதனால் அதிகப்படியான உடல் எடை கூடி வயிற்றைச் சுற்றியிருக்கும் பானைப்போல் தொப்பை உருவாகிவிடுகின்றது.

தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். தொப்பையை குறைக்க சிறந்த பொருட்களில் ஒன்று தான் வெந்தையம் அதிலும் வெந்தயத்தை டீ போட்டு குடித்தால் பயன்கள் ஏராளம் என்று சொல்லப்படுகின்றது.

நீரிழிவு நோய்க்கு, சீரண சக்திக்கு, மூளை செயல்பாற்றிற்கு, சீக்கிரம் வயதாகுவதை தடுப்பதற்கு, பொடுகுத் தொல்லை போக்க இவற்றுக்கு எல்லாம் வெந்தைய டீ மிகவும் உதவி புரிகின்றது.

வெந்தையத்தை வைத்துக்கொண்டு வெந்தய டீ யை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

டீ தயாரிக்கும் முறை

முதலில் வெந்தய விதைகளை உரலில் வைத்தோ அல்லது மிக்ஸியிலயே நுனிக்கி கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

அதனுடன் வெந்தய பொடியை போட்டு அதனுடன் ஹெர்பல் மூலிகை கூட சேர்த்து கொள்ளலாம்.

மூடியை போட்டு மூடி 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.

இப்பொழுது டீயை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.

அதனுடன் தேன் சேர்த்து சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் பருகலாம்.

இந்த வெந்தய டீ யை 6 வாரம் எடுத்து வந்தாலே போதும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: