வெடித்த பிரச்சனை தற்கொலை செய்ய துணிந்த பொன்மகள் வந்தாள் சீரியல் நாயகி!

0
894

பிரபல தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இருந்து நாயகி ஆயிஷா நீக்கப்பட்டு மேக்னா நாயகியாக கமிட்டானார்.

ஏன் இந்த நாயகி மாற்றம் என்று விசாரித்ததில் ஒரு திடுக்கிடும் தகவல் வந்துள்ளது.

ஆயிஷா கூறுகையில், எனக்கும் இயக்குனருக்கும் சில பிரச்சனைகள் இருக்கிறது. ஒருநாள் படப்பிடிப்பில் உடை அணிந்து கொண்டிருக்கும் போது இயக்குனர் திடீரென்று கதவை திறந்து உள்ளே வந்துவிட்டார், எல்லோரும் வந்தனர் இதனால் அசிங்கமாகிவிட்டது. என் அறை கதவை மூடிக்கொண்டு சத்தமாக அழுதேன், ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன் என்று நடிகை கூறுகிறார்.

ஆனால் இயக்குனரோ அவருக்காக நான் இந்த சீரியலில் நிறைய அட்ஜஸ்ட் செய்திருக்கிறேன், அவருக்கு சரியாக நடிப்பு கூட வரவில்லை ஆனால் ஒவ்வொரு முறையும் கற்றுக் கொடுத்து பொறுமையாக படமாக்குவேன்.

எனது மகள் போல் அவரை பார்த்துக் கொண்டேன். ஆனால் அவரோ என் மேல் புகார் தெரிவித்திருக்கிறார். சீரியலில் நாயகி மாற்றப்படுவது இயக்குனர் கையில் இல்லை, தயாரிப்பு நிறுவனமும், தொலைக்காட்சியும் பேசி தான் முடிவு எடுத்தார்கள், என் மீது எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: