வீட்ல மாறிமாறி எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம போகுதா? இந்த வாஸ்துவை கடைப்பிடியுங்க!

0
1782

பொதுவாக வீடு கட்டப்படும் போது நாம் வாஸ்து முறைப்படி தான் கட்டுவோம். சில நேரங்களில் நம்முடைய செளகரியத்திற்காக சில மாறுதல்களை வீட்டில் ஏற்படுத்தி கொள்வோம். இதுவே வாஸ்து தோஷமாகிறது என்கின்றனர்.

காரணமே தெரியாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுகிட்டு வரும். இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய பிரச்சனை இந்த வாஸ்து தோஷம் தான். எனவே இந்த வாஸ்துப்படி நம் ஆரோக்கிய நலனை தக்க வைக்க சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியிருக்கிறது.

வயிற்று பாதிப்பு! நமது உடலின் நடுப்பகுதி என்றால் அது நமது வயிறாகும். எனவே வீட்டின் நடுப்பகுதி அமைப்பு நமது வயிற்றை பாதிக்கிறது. எனவே வீட்டின் நடுப்பகுதியை எப்பொழுதும் கழுவி பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நிறைய வயிற்று பிரச்சினை ஏற்படக் காரணம் வீட்டின் நடுப்பகுதியில் தண்ணீர் குழாய் துளை போடுதல், ஜெனரேட்டர் வைத்தல், இன்வெர்ட்டர் வைத்தல், மாடிப்படிகள், கழிவறைகள் போன்றவை அங்கு அமைந்திருப்பதே காரணமாகும். வேண்டும் என்றால் வீட்டின் நடுப்பகுதியில் டைனிங் டேபிள் போட்டு கொள்ளலாம். ஆனால் கனரக பொருட்கள் எதையும் வைக்கக் கூடாது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் ! வீட்டின் தென்கிழக்கு திசையானது வீட்டிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. தென்மேற்கு திசை வீட்டிலுள்ள பெரியவர்களின் உடல் நிலையைப் பாதிக்கும். இந்த இரண்டு திசையிலும் சாய்வு, பாதாள கூடாரம், வடிகால் அமைப்பு, விரிசல்கள் போன்றவை இருக்கக் கூடாது.

நோய்கள் பெருகும்! வடகிழக்கு திசையில் குப்பைத்தொட்டி, கழிவறைகள், தெய்வ வழிபாடு போன்றவற்றை அமைக்க கூடாது. வடகிழக்கு திசையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பங்கறையில் மருந்து பொருட்களை வைக்கக் கூடாது. இதனால் உங்களுக்கு இன்னும் நோய்கள் பலமடங்கு பெருகும்.

தூங்குதல்! எப்பொழுதும் தெற்கு அல்லது கிழக்கு நோக்கிய திசையில் தூங்க வேண்டும். தென்மேற்கு திசையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் படுப்பது நல்லது.
சமையலறை! வீட்டில் உள்ள சமையலறையைக் கொண்டு நமது உடல் நலத்தையும் வியாதிகளையும் வாஸ்து இணைக்கிறது. சமையலறையை எப்பொழுதும் நெருப்பு திசையில் அமைக்கக் கூடாது. அப்படி அமைத்தால் நிறைய உடல் நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே சமையலறையை எப்பொழுதும் தென்கிழக்கு திசையில் கட்ட திட்டமிடுவது நன்மை தரும்.

எலுமிச்சை மரங்கள்! வீட்டின் சுற்று சுவர் நுழைவு வாயில் கதவின் உயரத்திற்கு சமமாக இருக்க வேண்டும். கதவிற்கு இரு புறங்களிலும் எலும்பிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் தாவரங்களை நட்டி வைப்பது நல்லது. இது உங்களுக்கு நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்வை கொடுக்கும். வீட்டில் உள்ள தூணிற்கு கீழ் உட்காரக் கூடாது. இல்லையென்றால் மன அழுத்தம், தலைவலி, நினைவிழப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

தீபம்! நெருப்பு திசையான தென் கிழக்கு திசையில் தான் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இது உங்களுக்கு நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கும்.

அனுமான் படம்! தெற்கு திசையை நோக்கி கடவுள் ஸ்ரீ அனுமானின் படத்தை வைத்து வழிபட்டு வந்தால் நல்ல ஆரோக்கியம் கிட்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: