வீட்டை விட்டு ஓடி வந்த பள்ளி மாணவி. நான்கு நாட்களாக நான்கு பேர் செய்த கொடூரம்.!

0
410

பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து தப்பி வந்த 15 வயது பள்ளி மாணவியை நான்கு நாட்களில் நான்கு பேர் அடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் நகரில் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பெற்றோருடன் மன வருத்தத்தில் இருந்துள்ளார். அவரது படிப்பு தொடர்பாக பெற்றோர் கண்டித்ததால் கோபத்தில் இருந்த அந்த மாணவி ஜூலை 17-ம் தேதி வீட்டில் இருந்து வழக்கம்போல் பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

ஆனால் பேருந்தில் இருந்து வீட்டுக்கு செல்லவில்லை. மாறாக, வழியிலேயே பேருந்தை விட்டு கீழே இறங்கியுள்ளார். சிறிது நேரம் நடந்து சென்ற அந்த மாணவி, வெளியூர் செல்லும் வேறு ஒரு பேருந்தில் ஏறியுள்ளார்.

அந்த பேருந்து பயணம் செய்யும் வரை அவர் பயணம் செய்துள்ளார். மாலை நேரம் ஆன உடன் அவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அ;ந்த மாணவி எங்கேயும் இறங்காததால் அந்த தனியார் பேருந்தின் நடத்துனர் சந்தேகம் அடைந்தார்.

அந்த மாணவியிடம் விவரம் கேட்டபோது, அவர் வீட்டை விட்டு யாரிடமும் சொல்லாமல் ஓடி வந்த விவரம் தெரிய வந்தது.பயந்து போன மாணவி, தவறுதலாக வந்து விட்டேன், தன்னை வீ்ட்டில் கொண்டுபோய் விடும்படி அந்த நடத்துடனரிடம் கெஞ்சி கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த மாணவியை வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி கூட்டிச் சென்ற நடத்துனர், தனி இடத்திற்கு அழைத்துச் சென்று மாணவியை இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் காலையில் இருந்து அங்கிருந்து ஓட்டுனர் தப்பியோடி விட்டார்.
காலையில் விடிந்து பார்த்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி அதிர்ந்து போயுள்ளார். இதன் பிறகு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை வழிமறித்து அந்த மாணவி உதவி கேட்டுள்ளார். உதவுதாக கூறிய இருவரும், அந்த மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.நசன்கஞ்ச் என்ற பகுதியில் அவர்கள் மாணவியை விட்டுச் சென்றனர்.

அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி ரஜூன் வர்மா என்ற மற்றொரு இளைஞரும், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறி நான்கு நாட்களாக அடுத்தடுத்து நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு, சந்தல்பூர் சாலையில் மயக்கநிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் வந்து அந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

மாணவிகளை பாலியல் பாலத்காரம் செய்தது தொடர்பாக சிலரை கைது செய்து போலீஸார் விசாரணை செய்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: