வீட்டில் பிரியாணி இலையை எரித்தால் அற்புதம் நடக்கும்! ரஷ்ய ஆய்வாளரின் மகிழ்ச்சியான தகவல்!

0

சமையலில் உணவின் மணத்தையும், ருசியையும் அதிகரிக்க பிரியாணி இலை பயன்படுகிறது. அதோடு மட்டுமின்றி, அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில்(Aromatherapy) சுவாச பிரச்சினை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கூட உதவுகிறது.

இந்த பிரியாணி இலையை பயன்படுத்தி மன அழுத்தத்தை எளிமையாக குறைப்பதற்கு ரஷ்ய ஆய்வாளர் கென்னடி என்பவர் ஒரு அற்புத ஐடியாவை கூறியுள்ளார்.

பிரியாணி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?
பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து, அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.

நன்மைகள்
பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மனதிற்கு அமைதியை தருகிறது.

பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால், அது வீட்டில் உள்ள துர்நாற்றத்தை வெளியேற்றி, வீட்டை நல்ல நறுமணத்துடன் மாற்றி, நேர்மறை ஆற்றல்களை வீடு முழுவதும் உருவாக்குகிறது.

இதில் புரதம், வைட்டமின் எ, வைட்டமின் சி, பொட்டாசியம், சோடியம், ஜின்க், இரும்புச்சத்து என்பன உள்ளது. இளமையா நம்மை வைத்திருக்க இந்த பிரியாணி இலை உதவுகிறது.இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இதனால் சருமத்திற்கு தேவையான செல்களை உற்பத்தி செய்கிறது. இதனால் பிரியாணி இலையை சாப்பிடுபவர்கள் அழகாக இருப்பார்கள். இதனால் முகத்தை இளமையாக்குகிறது.

பிரியாணி இலையை சாப்பிடுவதால் முடி கொட்டுவது நின்றுவிடும். பிரியாணி இலையை டீ வைத்து குடிப்பதால் முடி உதிர்வை நிறுத்த முடியும்.

பிரியாணி இலைகளை எடுத்து, தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து அந்த நீரை சருமத்தில் எரிச்சல் உள்ளவர்கள் கழுவினால், சருமத்தில் வரும் எரிச்சல் குணமாகும்.

பாம்பு கடித்தால் அதற்கு மருந்தாக பிரியாணி இலை பயன்படுகிறது. இந்த இலைக்கு விசத்தை முறிக்கும் தன்மை உள்ளது. இது தோலில் கிருமிகள் இருந்தாலும் அதை அழித்து விடும்.

இதில் ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி ஃபங்கம் உள்ளது.

பிரியாணி இலையை உணவில் சேர்க்கும் போது அதை ஒதுக்காமல் சேர்த்து சாப்பிட வேண்டும். இது உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது.

மாசுகளால் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு தொல்லை இருப்பவர்கள் பிரியாணி இலையை கொதிக்க வைத்த நீருடன் எலுமிச்சை சாறு சேரத்து, தலைக்கு தேய்த்து வந்தால் இவ்வாறான பிரச்சனைகள் தீரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅத்தை வீட்டிற்கு செல்வதாக சென்ற 20 வயது இளம் பெண் எங்கே போனார்! சிசிடிவியில் கிடைத்த காட்சிகள்! தவிக்கும் பொலிசார்!
Next articleபற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்கள் என்ன தெரியுமா! உடனே தெரிந்துகொள்ளுங்கள்!