வீட்டில் பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லைகளை நீங்குவதற்கு என்ன செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.
தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் என ஏதாவது ஒன்றினை காலையில் எழுந்ததும் பார்த்தால் செல்வ வளம் பெருகும்.
கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த கடுகு எண்ணெய் மிகவும் உதவும். கடன் கொடுத்தோ, வாங்கியோ அவதிப்படுவோர் கடுகு எண்ணெய்யில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.
சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவினால், சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகளுக்கு உணவாகும். இவைகள் அவற்றை சாப்பிட உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவதை கண்கூடாக தெரியும். இவற்றினை காலை வேலையில் குளித்து முடித்தவுடன் செய்யவும்.
புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
வெல்லத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும். வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.