சுவாமிக்கு படைத்த வெற்றிலையை என்ன செய்வது! இங்கே போடுவது சரியா! என்ன செய்யலாம்!

0
1543

நல்ல நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் சுவாமிக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் போன்றவற்றை வைத்து வழிபடுவது வழக்கம்.

இதில் பூவை சுவாமிக்கு வைத்துவிடுவோம், பழத்தை நாம் உண்டுவிடுவோம் அனால் வெற்றிலையை என்ன செய்வது? வாருங்கள் பார்ப்போம்.

பூஜை முடிந்த சில மணி நேரங்களில் வெற்றிலை பாக்கை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து போட்டுக்கொள்ள சொல்லலாம் அதில் தவறில்லை.

சில வீடுகளில் யாருக்கும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருக்காது. இது போன்ற சூழலில் வெற்றிலையை பசுமாட்டிற்கு தருவது நல்லது.

சிலரது வீட்டருகே பசுமாடும் இல்லை என்றால் அந்த வெற்றிலை பாக்கை மற்றவர்கள் கால் படாத இடத்தில் போட்டுவிடலாம்.

சுவாமிக்கு படைத்த வெற்றிலை பாக்கை குப்பையில் எடுத்து போடுவது தவறு. அதை யாரும் செய்யவேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: