வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தாய், மகன் சடலங்கள்! லேப்டாப்பில் இருந்த வார்த்தைகள்!

0
315

கேரளாவை சேர்ந்த தாய் – மகன் மும்பையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் மீனாட்சி. இவர் மகன் வெங்கடேஸ்வர். இருவரும் கடந்த 2017-ல் மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து சில தினங்களாக துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வெங்கடேஸ்வரும், மீனாட்சியும் சடலமாக கிடந்தனர்.

அவர்களின் சடலம் அழுகிய நிலையில் இருந்த சூழலில் இருவரும் இறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என பொலிசார் கூறினர்.

அங்கு இருந்த லேப்டாப்பை பொலிசார் கைப்பற்றிய நிலையில் அதில், எங்கள் மரணத்துக்கு யாரும் பொறுப்பில்லை எனவும் மீனாட்சிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு வெங்கடேஸ்வரும் விஷம் குடித்து இறந்ததாகவும் டைப் செய்யப்பட்டிருந்தது.

பொலிசார் கூறுகையில், இவர்களது குடியிருப்பு ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதத்தோடு முடிவுக்கு வந்ததால், வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டின் உரிமையாளர் கூறியிருக்கிறார். வேறு வீடு பார்க்க இரண்டு மாதம் அவகாசம் கோரியிருந்த வெங்கடேஸ்வரன் இம்முடிவை எடுத்துள்ளார்.

ஐடி துறையில் வேலை பார்த்து வந்த வெங்கடேஸ்வரன் சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார், அதன் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இம்முடிவை எடுத்திருக்கலாம் என கருதுகிறோம்.

இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு சென்றுள்ள நிலையில் அதன் முடிவுக்காக காத்துள்ளோம் என கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீர்கொழும்பில் நிலவிய பதற்றம்! தப்பியோடிய மூவர்! வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு!
Next articleஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி! பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை! முழு குடும்பமும் அமைதியில்!