வீட்டின் படுக்கை அறையில் இவற்றை எல்லாம் வைக்காதீர்கள்!

0

நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பவை.

அந்த வகையில் நம் வீட்டு படுக்கை அறையில் வைத்திருக்கும் சில ஓவியங்கள் கணவன் மனைவி உறவுகளுக்குள் விரிசல்களை ஏற்படுத்துமாம்.

படுக்கை அறையில் வைக்கக் கூடாத ஓவியங்கள் எவை?

குழப்பமான நவீன ஓவிய படங்களை வீட்டின் படுக்கை அறையில் வைக்கக் கூடாது. ஏனெனில் அது தம்பதிகளிடையே உள்ள பிரச்சனைகள் எப்போதும் குழப்பத்துடன் இருக்கும்.

படுக்கை அறையில் இரண்டு மாஸ்க் கொண்ட ஓவியங்களை வைக்கக் கூடாது. ஏனெனில் அது ஒரு பொய்யான மாஸ்க்கை அணிந்து பொய்யான வாழ்க்கை வாழ்க்கையை ஏற்படுத்துவதுடன், தம்பதிகளின் உறவை பிரித்துவிடும்.

ஓவியத்தில் பலதார மணம் புரிந்த ஒரு ஆண் மற்றும் 4 அல்லது 5 பெண்கள் இருக்குமாறு உள்ள ஓவியங்களை படுக்கை அறையில் வைக்கவே கூடாது. அது தம்பதிகளின் உறவில் விரிசலை உண்டாக்கும்.

படுக்கை அறையில் போர் காட்சி உள்ள ஓவியங்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிலும் இறந்த சடலங்கள், குழந்தை அழுவது அல்லது மக்கள் கூட்டமாக இறந்து கிடப்பது போன்ற ஓவியங்களை வைக்கக் கூடாது.

இரையை தேடும் வேட்டைக்காரர்கள், அல்லது இரையை கொன்று அருகில் வைத்திருப்பது போன்ற ஓவியங்களை படுக்கை அறையில் வைக்கக் கூடாது. ஏனெனில் அது தம்பதிகளின் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமரு, கட்டியை குணப்படுத்தும் இரணகள்ளி!
Next articleகூட்டு எண் 8 (17, 26) பிறந்தவர்கள் இந்த எண்காரரை திருமணம் செய்யக்கூடாது!