உங்கள் வீட்டிற்கு அருகே இவற்றில் ஒன்று இருந்தாலும் உங்களால் நிம்மதியாக வாழவே முடியாது!

0
21682

வீடு என்பது ஒருவருடைய வாழ்க்கையின் அடிப்படை தேவையாகும். அதிலும் புதிதாக ஒரு வீடு கட்டுவது என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் இலட்சியம் என்று கூட கூறலாம். சொந்த வீடோ, வாடகை வீடோ நமது மகிழ்ச்சியின் பெரும்பாலான பகுதி நமது வீட்டை நம்பியே உள்ளது. வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடியிருக்க நமது வீட்டிற்குள் நேர்மறை சக்திகள் அதிகம் இருக்க வேண்டும்.

புது வீடு கட்டும் போதும் சரி, புது வீட்டிற்கு குடிபோகும் போதும் சரி அந்த வீட்டின் வாஸ்து பற்றி நாம் அதிகம் சிந்திப்போம். எந்த திசையில் கதவு இருக்கிறது, எந்த திசையில் படுக்கையறை இருக்கிறது, எத்தனை ஜன்னல் இருக்கிறது என பார்த்து பார்த்து வீட்டை தேர்வு செய்வோம். அப்படி செய்தும் நம் வீட்டில் மகிழ்ச்சி இல்லாமல் எப்பொழுதும் பிரச்சினைகளும், குழப்பங்களும் நிலவும். அதற்கு காரணம் நமது வீட்டின் சுற்றுப்புறமாக கூட இருக்கலாம். இந்த பதிவில் உங்கள் வீட்டை சுற்றி இருக்கக்கூடாதவை என்னென்ன என்று பார்க்கலாம்.

கவனிக்க வேண்டியவை
இந்த காலகட்டத்தில் வீடு வாங்கும்போது வீட்டின் வாஸ்துவை மட்டும் பார்த்து அந்த வீடு தன் குடும்பத்திற்கு சரியாக இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு விடுகிறோம். ஆனால் வீட்டை சுற்றி என்னென்ன இடங்கள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஏனெனில் சில இடங்கள் அதிகளவு எதிர்மறை ஆற்றலை வெளியிடும். இந்த இடங்களுக்கு அருகில் வசிக்கும்போது அது உங்கள் குடும்பத்தின் நிம்மதியை பல்வேறு வகையில் கெடுக்கக்கூடும்.

சுடுகாடு
சுடுகாட்டிற்கு அருகில் பெரும்பாலும் யாரும் தங்கமாட்டார்கள். ஒருவேளை அந்த சூழ்நிலை வந்தாலோ, உங்கள் வீட்டில் இருந்து பார்த்தால் சுடுகாடு தெரிவது போல இருந்தாலோ நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இந்த இடத்திலிருந்து வரக்கூடும் அதிகப்படியான எதிற்மறை ஆற்றல்கள் நிச்சயம் உங்கள் வீட்டின் மீதும், குடும்பத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த இடத்திற்கு அருகில் வசிப்பது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களை உளவியல்ரீதியாகவும் பாதிக்கும்.

மருத்துவமனை
பொதுவாக வீட்டிற்க்கு அருகில் மருத்துவமனை இருப்பது நல்லது மற்றும் பாதுகாப்பானது என்ற கருத்து உள்ளது. ஆனால் மருத்துவமனை, கிளினிக் போன்ற இடங்களில் இருந்து வெளிப்படும் எதிர்மறை சக்திகள் உங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மூலம் பல்வேறு பாக்டீரியாக்களும், வைரஸ்களும் பரவவும் வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் எளிதில் இதனால் நோய்வாய்ப்படுவார்கள்.

பாழடைந்த இடங்கள்
உங்கள் வீட்டின் கதவோ அல்லது ஜன்னலோ ஏதாவது பாழடைந்த இடத்தை நோக்கி இருந்தால் அவை மூடியே இருப்பது நல்லது, இல்லையென்றால் அதனை அங்கிருந்து முற்றிலுமாக எடுத்து விடுங்கள். அம்மனுஷ்ய் சக்திகளின் மையமாக இந்த இடங்கள்தான் இருக்கும். அவை உங்கள் வீட்டில் இருக்கும் நேர்மறை சக்திகளை அழித்துவிடும். இதனால் மனநல பாதிப்பு உறவுச்சிக்கல்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஒருபோதும் இதுபோன்ற இடங்களுக்கு அருகில் குடிசெல்லாதீர்கள்.

சாலைகள்
பவிஷ்ய புராணத்தில் குறிப்பிட்டுள்ள படி குடும்பங்கள் வசிக்கும் வீடானது ஒருபோதும் சாலைக்கு குறுக்கிலோ அல்லது அதற்கு அருகிலேயோ கட்டப்படக்கூடாது. தொடர்ச்சியான மக்கள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்து அதிர்வுகள் மற்றும் ஒலி உங்கள் குடும்பத்தினரின் ஆரா மீது பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். இந்த இடங்களில் அலுவலங்களோ, கடைகளோ வைப்பது நல்ல பலனை ஏற்படுத்தும். இந்த எதிர்மறை ஆற்றல்கள் திருமண பிரச்சினைகளை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சூதாட்ட க்ளப்
ஒருவர் தங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களையும், சோகங்களையும் இறக்கி வைக்க வருமிடத்திற்கு அருகில் ஒருபோதும் நீங்கள் வசிக்கக்கூடாது. உங்கள் ஆரா அதற்கு அருகில் இருக்கும் மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களை உற்றுநோக்கும். சூதாட்டம் நடக்கும் இடத்தில் பெரும்பாலும் நல்ல சக்திகள் இருக்க வாய்ப்பில்லை. இதனால் உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மதுபானக்கடை
உங்கள் வீட்டிற்கு அருகில் மதுபானக்கடை இருந்தாலோ அல்லது உங்கள் வீட்டிற்கு அருகில் புதிதாக மதுபானக்கடை திறக்கப்பட்டாலோ உடனடியாக நீங்கள் அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டியது அவசியமாகும். மதுபானம் தீயசக்தியின் அடையாளமாகும், அதற்கு அருகில் வாழ்வது உங்கள் குடும்பத்தின் அமைதியை சீர்குலைப்பதாக இருக்கும். இது உங்களுக்கு மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதுடன் உங்களுக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்.

இறைச்சி கடை
அப்பாவி மிருகங்கள் இறைச்சிக்காகவும், மற்ற பொருள்களுக்காகவும் கொல்லப்படுகிற இடத்தில் நீங்கள் அமைதியான வாழ்க்கை வாழ முடியாது. இங்கிருந்து எழும் எதிர்மறை சக்திகள் உங்களுக்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். மரணத்திற்கு அருகிலேயே வாழ்வது உங்கள் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது. எனவே வேறு இடத்திற்கு குடிபோவதே நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் உயிருக்கு வரப்போகும் ஆபத்துக்களை இந்த பறவைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்!
Next articleவிஷமாக மாறும் சர்க்கரை – கசப்பான உண்மை!